காதல் பயணம்


images
தென்றல் மெதுவாய் வருடிச்
சென்றுக் கொண்டிருக்க – நீரலைகள்
படகில் மோத – மோன நிலையில்
இருந்தேன் நான்….

என்னெதிரே அவள் அமர்ந்திருக்க
மாசற்ற அவள் முகத்தில் – கண்கள்
எனை நோக்கிப் பார்த்திருக்க – அவை
பேசியக் கதைகள் பல…

என் விரல்கள் அவள் கைகளை
அளக்க – அவள் முகம் அந்தி நேர
சூரியானாய் சிவந்தது….

எனை நோக்கியக் கண்கள்
மெல்லத் தாழ – என் அதரங்களோ
வேறு கதை சொல்லத் துடித்தன ….

நீரலைகள் படகை
உந்திச் செல்ல – காதல்
பயணம் தொடர்ந்தது…..

– அன்புடன் எல்கே

Advertisements

2 Comments »

  1. ஆகா…! தொடரட்டும்…

    அன்பு தினம் – என்றும் வேண்டும்…
    தினம் என்றும் – அன்பாக வேண்டும்…

    அன்பு தின வாழ்த்துக்கள்…


RSS Feed for this entry

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: