Archive for the ‘கவிதை’ Category

ஒன்றாய் …

மே 4, 2014

images

நாம் இணைந்து கண்டக்

கனவுகள் பல – இருப்பதென்னவோ

தனித்தனியாய் – கனவு மட்டும்

ஒன்றாய்….

 

விநோதங்கள் பல

இவ்வுலகில் – அதில் நம்

கனவும் ஒன்றாய்…

 

சில நேரங்களில் தூர

தேசங்களில் ஒன்றாய் – சிலவற்றில்

உன் வீட்டில் இருவருமாய் – அர்த்தமற்றதாய்

பல – கனவு மட்டும்

ஒன்றாய்….

 

 

அன்புடன் எல்கே

Advertisements

காதல் பயணம்

பிப்ரவரி 14, 2014

images
தென்றல் மெதுவாய் வருடிச்
சென்றுக் கொண்டிருக்க – நீரலைகள்
படகில் மோத – மோன நிலையில்
இருந்தேன் நான்….

என்னெதிரே அவள் அமர்ந்திருக்க
மாசற்ற அவள் முகத்தில் – கண்கள்
எனை நோக்கிப் பார்த்திருக்க – அவை
பேசியக் கதைகள் பல…

என் விரல்கள் அவள் கைகளை
அளக்க – அவள் முகம் அந்தி நேர
சூரியானாய் சிவந்தது….

எனை நோக்கியக் கண்கள்
மெல்லத் தாழ – என் அதரங்களோ
வேறு கதை சொல்லத் துடித்தன ….

நீரலைகள் படகை
உந்திச் செல்ல – காதல்
பயணம் தொடர்ந்தது…..

– அன்புடன் எல்கே

நிசப்தம்

மே 20, 2013

மீண்டும்  மனிதர்களின்
சப்தம் பொருட்கள்
இறக்குவதும் நகர்த்தவதுமாய்..

 

சில மணி நேரங்களில்
முடிந்துவிடும் மீண்டும்
நிசப்தம்தான் வீடு
காலியாகும் வரை…

குடைக்குள் மழை

மார்ச் 10, 2013

மழை தன் தூறல்களால்

பின்னணி இசை கோர்க்க
தூறலில் இருந்து
காத்தக் குடை
வெளிச்சத்தை மாற்றி
இருள் சேர்க்க – என் மீது
மழை பொழிந்தது – உன்
முத்த மழை ….
 
அன்புடன் எல்கே

 

 

 

அவள் நினைவு

பிப்ரவரி 17, 2013

அதிகாலை நேரத்தில் 

மழை தன் நர்த்தனைத் துவங்க ..

ஜன்னலோரம் தேனீர் கோப்பையுடன் 

அமர்ந்திருந்த என் மேல் மழைத் துளிகள் 

பட்டு சிதற என் நினைவுகளும் 

சிதறத் துவங்கின..

 

என்னவளுடன் நடந்த 

மழைக் காலங்கள் – அவள் நினைவாய் 

எழுதிய மழை நேரத்துக் 

கவிதைகள் – அதனுடன்

எனை விட்டு அவள் 

பிரிந்த மழை 

காலத்து மாலை நேரம்….

கோப்பையில் இருந்த தேநீர்

ஆறிவிட – ஆறாமல் 

அவள் நினைவு….

 

 அன்புடன் எல்கே 

 

தொலைந்து போனது

ஜனவரி 13, 2013
 
தொலைந்து போயின 

அதிகாலை சூரிய ஒளியில் 

மின்னும் பானைகள் வெண்கல 
பாத்திரங்கள்… 
 
அங்குமிங்கும் அதட்டல் 
குரல்கள் – புதுப் பாவாடை 
அணிந்து நடமாடும் 
தேவதைகள்- அவர்களின் 
பின்னே தொடரும் 
இளங்காளைகளின் கண்கள் ..
 
தொலைகாட்சியில் நடிகர்களின் 
வாழ்த்து குரல்கள் – அடுக்களையில் 
மின்சார அடுப்பில் குக்கரின் 
விசில் ..
 
தொலைந்து போனது 
பொங்கல் …
 
 
அன்புடன் எல்கே 

அகத்தின் நிலையே

திசெம்பர் 15, 2012

 

 

 

யாருமற்றதனிமை 
வேண்டிஓடினேன்யாருமில்லாஏதுமில்லா 
இடத்தில்நின்றேன்….. 

சப்தமற்றஇடம்தேடி 
ஓடிநின்றஎன்காதில்ஒலிக்க 
துவங்கினஆயிரம்ஆயிரம் 
சப்தங்கள்

யாருமற்றஏதுமற்ற 
இடத்திலும்விடாதொலித்த 
சப்தங்கள்உணர்த்தியபாடங்கள் 
பல…. 

புறசப்தமோநிசப்தமோ 
அகத்தின்நிலையே 
நிலையானது

 

 

 

ஏங்க விடாதே ….

திசெம்பர் 11, 2012

தன்  காதலியாம் 
பூமகளை  பார்க்க  வேண்டிய 
நேரம்  கடந்தும் 
காணவில்லை  கதிரவனை

பலர்  முன்னிலையில் 
காதலியை  காண  வெட்கமோ – மேகத்தின்
பின்  ஒளிந்துகொண்டு  கண்ணாமூச்சி  ஆட்டம் 
காலையிலேயே …

காதலனை காணாத  சோகத்தில் 
பூமகளின்  கண்ணீர்துளிகள் 
சாலையில் தேங்கி  நிற்க – கதிரவனே 
வந்துவிடு  உன்  காதலியை 
ஏங்கவிடாதே ….

 

தனி உலகம்

ஓகஸ்ட் 22, 2012

அது அவர்களின்
தனி உலகம்…

பல்லிகளும் அவர்களிடம்
உரையாடும் …

உயிரற்ற பொம்மைகளும்
உயிர் தோழிகளாவார்கள்…

சுவர்களும்
திரை சீலைகளாகும்- சிறு
கம்பியும் தூரிகையாகும்…

அது அவர்களின்
தனி  உலகம்…

 

-அன்புடன் எல்கே

உனக்கான பொருளாய்….

ஓகஸ்ட் 18, 2012
உனக்கான பொருளாய்
பாதுகாக்கிறாய் எனை ..

 

கோபம் கொள்ளும்
சமயம்  உனை மேலும்
சீண்டவே நினைக்கிறது
மனம்….

 

பெண்ணே
என்றும் நான்
உன்னுடையவன்தான் – சந்தேகம்
தவிர் – அன்பை பொழி…..

 

-அன்புடன் எல்கே