பயணக் குறிப்புகள் – 2

பிப்ரவரி 11, 2014

பத்துமணிக்கு வந்த டாக்சியில் சென்று எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்,. எழும்பூருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள்.. இந்த கால சென்னையின் பரபரப்பை பிரதிபலிப்பதாய் இருபத்தி நான்கு மணிநேரமும் மக்கள் கூட்டமும், இரைச்சலும் நிறைந்து காணப்படும் சென்ட்ரல். எழும்பூரோ  பரபரப்பில்லாத ஆரவாரமற்ற நகரம் போல் தோற்றமளிக்கிறது. எந்த நேரத்தில் சென்றாலும் எழும்பூரில் பரபரப்பு இருக்காது . அன்றும் அப்படிதான் விடுமுறை நாளன்று  நிதானமாய் சோம்பலுடன்  எழுந்திருக்க மனமில்லாமல் படுத்தே இருப்பவர்களை போன்று இருந்தது எழும்பூர் ரயில் நிலையம். ஏழாவது பிளாட்பாரத்தில் யாரும் சீண்டாத முதிர் கன்னியை போல் நின்றுக் கொண்டிருந்தது சேலம் எக்ஸ்பிரஸ் .

 

நான் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு , வண்டியில் விளக்குகள் “ஆன்” செய்யப்பட்ட பிறகு எனக்கு ஒதுக்கபட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். கீழ்  இருக்கை வயதானவர்களுக்குதான் சரி பட்டுவரும். காற்று சரியாக வராத நிலையில் கொடுமையாக இருக்கும் பயணம். தூக்கமும் வரவில்லை காற்றும் வர வில்லை. எனக்கு எதிர்புற வரிசையில் ஒரு நாற்பது வயது பெண்மணி. சிறிது நேரம் கழித்து கணவன் மனைவி போன்று தோற்றம் அளித்த இருவர் வந்தனர்.வந்ததில் இருந்து பேசிக் கொண்டே இருந்தனர். அடுத்தவர்களை கவனிப்பது தவறு என்பார்கள். ஆனால் அவர்களின் பேச்சு அவர்களை கவனிக்க தூண்டியது. உரக்கவும் இல்லாமல் , மெதுவாகவும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். இடை இடையில் அந்தப் பெண் கண் கலங்குவது நன்றாகத் தெரிந்தது. மொபைலில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பேசிக் கொண்டே  அவர்களையும் நடு நடுவே பார்த்துக் கொண்டே பயணத்தைத் துவங்கினேன்.

மெதுவாய் துவங்கிய ரயிலின் ஓட்டம் , தாம்பரம் தாண்டியப் பின் வேகமாய் மாறியது. செங்கல்பட்டு தாண்டும் வரை விழித்திருந்த என்னை, நித்ராதேவி தழுவ தூங்கத் துவங்கினேன். அப்பொழுதும் அந்த தம்பதியரின் பேச்சு தொடர்ந்துக் கொண்டேதான் இருந்தது. பார்த்தால் தம்பதிகள் போல் இருந்த அவர்கள் , சேலம் டவுன் ஸ்டேஷனில் இறங்கி ஆளுக்கொரு திசையில் பயணப் பட்டனர். அப்படி என்னதான் பேசினார்களோ , எனக்குத் தெரிந்து விடியும்வரை அவர்கள் பேச்சு தொடர்ந்துக் கொண்டேதான் இருந்தது.

இது ஒரு அனுபவம் என்றால், ஒரு முறை திருச்சிக்கு குடும்பத்துடன் சென்றது இன்னொரு வகையான காமெடி அனுபவம் என்றே சொல்லலாம்.

பொதுவாய் தனியார் பேருந்தில்தான் பயணம் செய்வேன். அந்த முறை அணைத்து தனியார் பேருந்துகளிலும் டிக்கெட் காலி. எனவே அரசுப் பேருந்தை தஞ்சம் அடைந்தேன். பொதுவாய் ஐ ஆர் சி டி சி ஆகட்டும் ரெட் பஸ் தளமாகட்டும் இருபத்திநான்கு மணிநேர பார்மேட்டில்தான் நேரத்தை குறிப்பிடுவார்கள். இங்கு தலை கீழ். அவர்கள் குறிப்பிடிருந்த நேரத்தை பார்க்கவில்லை.  இரவு பேருந்து நிலையத்திற்கு சென்று காத்திருந்தோம், பேருந்தும் வந்தது. ரிசர்வேசன் லிஸ்ட்டில் பெயரில்லை. எப்படி இருக்கும் இரவு பத்து மணிக்கு புக் பண்றதுக்கு பதிலா காலை பத்து மணிக்கு புக் பண்ணி இருந்தேன்.

வேறு ஒரு பேருந்தை பிடித்து திருச்சியும் கிளம்பியாச்சு. விழுப்புரம் தாண்டி அந்தப் பேருந்து , அந்த கால படிதாண்டா பத்தினி போல் விழுப்புரத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடித்து அங்கேயே நின்று விட, பிறகு அவர்கள் ஏற்றி விட்டப் பேருந்தில் ஒரு வழியாய் கஷ்டப்பட்டு திருச்சி போய் சேர்ந்தோம். இப்பொழுது திருச்சி சென்றாலும் எங்களால் மறக்க இயலாத பயணம் இது.

பயணங்கள் தொடரும்…

அன்புடன் எல்கே

 

 

 

 

 

 

 

Advertisements

6174 கதாப்பாதிரங்களைப் பற்றி – I

பிப்ரவரி 9, 2014

சுதாகர் கஸ்தூரி எழுதிய 6174 நாவலில் வரும் முக்கியக் கதாபாதிரங்களைப்  பற்றி சிறிது பார்ப்போம்…

இந்த நாவலில் கதைதான்  நாயகன்.. தனியாக இவர்தான் கதாநாயகன் என இயலாது. ஜானகியும் ,அனந்தும்  முக்கியப் அங்கு வகித்தாலும் அவர்கள் நாயக  நாயகியர் இல்லை.

ஜானகி :
இந்த நாவலின் மிக முக்கியக் கதாபாத்திரம் ஜானகிதான். திருவனந்தப்புரத்தில் மல்லிகை வைத்து வியர்வை மணத்தை  மாற்றியது பின் அதேப்  பூவை அனந்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் விமானத்தில் தூக்கி எறிந்தது . இந்த இரண்டும் அவர்களை எதிரணி ஆட்களிடம் இருந்துக் காப்பாற்றியது.
காதலில் தோல்வி பின் திருமணத்திலும் தோல்வி என தோல்விகளால் தொடர்கதையாக தன்னை முழுமையாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஜானகி , அனந்துடன்  தொடர்ந்து மோதினாலும் , பின் இறுதியில் இணைவது ஒரு வகையில் தமிழ் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதேப்  போல் , இறுதியில் அனந்தை  ரவியிடம் இருந்து காப்பாற்ற தனியாக போவதும் திரைப்படக் காட்சி போல் இருந்தது.
தோல்வியில் இவரதுக் கதை   துவங்கினாலும் இறுதியில் அனந்துடன் இணைகிறார்.
தேவராஜ் 
இந்தக் கதையில் மிக பலவீனமானக் கதாபாத்திரம் தேவராஜ் தான். அறிமுகம் ஆகும் காட்சியில் இருந்து இவரது மேல் படிப்பவர்களுக்கு  சந்தேகம் வந்துக் கொண்டே இருப்பதால் , தேவராஜின் பெயரில் இருப்பது எதிரணியின் ஆள்  எனத் தெரிய வரும்  இடத்தில் பெரிதாய் அதிர்ச்சி ஏற்படுவதில்லை.
ஒரு ரகசியமான ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் ஒருவர் எப்படியும் தொடர்ந்து அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பார் . அப்படி இருக்கையில் திடீரென்று ஆள்மாறாட்டம் செய்வது  எளிதா ??
அனந்த்  
இந்தக் கதையின் முக்கிய நபர். இவரது வாயிலாகத்தான் ஒவ்வொரு முடிச்சும் அவிழ்கிறது. ஆனாலும் மியான்மார் செல்லும் பொழுதும் இவரது சந்தேகம் இவருடன் பயணிக்கிறது .  துவக்கத்தில் இருந்தே பாதி நம்பிக்கையுடன் செயல்படும் அனந்த் , லோனாரில் (பூரியில் ??) கிடைக்கும் தமிழ்  புதிர் மூலம், பிரமீட்  தன மூலம்தான் கிடைக்கும் எனத் தெரிந்துக் கொண்டாலும் , அதன் பின்னும் சில இடங்களில் அவ நம்பிக்கையுடன் நடந்துக் கொள்வதைத் தவிர்த்திருக்கலாமோ ??
இன்னும் வரும்….
அன்புடன் எல்கே

ஈடுபாடு

பிப்ரவரி 4, 2014

கடந்த வாரம் தெரிந்தவர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். ஹோமமும் விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனால் எந்த நோக்கத்திற்காக ஹோமம் செய்யப்பட்டதோ அது நிறைவேறியதா எனத் தெரியவில்லை. ஹோமமும் சரி பூஜைகளும் சரி, செய்து வைக்கின்ற குருவும் செய்கின்ற கர்த்தாவும் மனமுகந்து வேறு சிந்தனையில் ஈடுபடாது ஹோமத்திலும் / பூஜையிலும் மட்டுமே மனம் செலுத்தி செய்யவேண்டும்.

இந்த நிகழ்விலும் மட்டுமல்ல , பல்வேறு இடங்களில் நான் கண்டதுதான் இவை. குரு ஹோமம் செய்துக் கொண்டிருக்க , யாருக்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறதோ அவர்கள் , தங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருப்பார்கள். சங்கல்பம் முடிந்தவுடன் மனையில் இருந்து எழுந்தால் மீண்டும் பூர்ணாஹுதி சமயத்தில் மட்டுமே மனைக்கு வர வேண்டியது. கணவன் மனைவி இருவருமே மனையில்தான் அமர வேண்டும் . மனைவி இல்லாமல் கணவன் மட்டும் அமர்ந்திருந்தாலும் எந்த வித பிரயோஜனமும் இல்லை.

இப்படி முழு ஈடுபாடுடன் செய்ய இயலாது என்றால் இந்த சம்பிரதாயங்களை செய்யாதீர்கள். ஈடுபாடு இல்லாமல் செய்வதற்கு செய்யாமல் இருப்பதே மேல். வருபவர்களை கவனிக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ள மற்றவர்கள் உள்ளார்கள். இல்லையென்றால் இந்த வைதீகக் காரியங்களுக்கு ஒரு நாளும் , மற்றொருவருக்கு ஒரு நாளுமாக இரண்டு நாட்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

அரைகுறையாக எந்த வித வைதீகக் காரியங்களையும் செய்ய வேண்டாம்

அன்புடன் எல்கே

இந்து சின்னங்களுக்கு தடை – இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்

ஜனவரி 25, 2014

இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார்பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில்ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களைக் குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏற்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன்அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.

 • மதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா?
 • மதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே! இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை?
 • மதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்?
 • எந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன? இதைத் தூண்டியவர்கள் யார்? சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்?
 • இந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா?
 • இவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும்
 • தூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
 • இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா?
 • கலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா?
 • தண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்டுவர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.

 • அம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை
 • பாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்
 • அழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு
 • சுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
 • புதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
 • முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும்
 • தடுப்பதில்லை.
 • பெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே!

இராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.

 இராமநாதபுரத்தை காக்க வீரத்துறவி.ஐயா. இராம.கோபாலன் அவர்களின் அறைகூவல்

இந்தக் கட்டுரை திரு பால கௌதமன் அவர்களால் எழுதப்பட்டு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இணையத் தளத்தில்  வெளிவந்துள்ளது

காணவில்லை – ஆம் ஆத்மி

ஜனவரி 16, 2014

ஆம், ஆம் ஆத்மி , நாங்கள் உங்களைப் போன்று சாதாரணர்கள் என்று சொல்லி கட்சியை ஆரம்பித்தவர்கள், தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிப் பெற்றவுடன் ,மெதுவாய் காணாமல் போகத் துவங்கி விட்டனர். முரண்பாடுகளில் மொத்த உருவமாய் விளங்கும் அர்விந்த் கேஜ்ரிவாலின் அன்றாட நடவடிக்கை தில்லி மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாய் இல்லை.

பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் எக்காலத்திலும் கூட்டுவைக்கமாட்டேன் என்று தன் பிள்ளைகளின் மீது சத்தியம் செய்தார் இந்த சத்தியசீலர். ஆனால் என்ன நடந்தது ? எந்தக் காங்கிரசை எதிர்த்துக் கடுமையாய் பிரச்சாரம் செய்தாரோ அதேக் காங்கிரஸின் ஆதரவில் அரியணை ஏறினார்.

கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றிருந்தால் பதவி ஏற்பு விழாவுக்கான செலவுக் குறைவாய் இருந்திருக்கும். மக்களில் ஒருவராய் தன்னைக் காட்டிக் கொள்ள ராம் லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்தினார்.விளைவு ஒரு தினக் கூத்துக்கு பல லட்சங்கள் செலவு.

அடுத்து அனைவருக்கும் இலவசக் குடிநீர் என்றுக் கூறினார். இப்பொழுது மீட்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவசம் அதே போன்றுதான் மின்சாரக் கட்டணக் குறைப்பும். கோடைக் காலங்களில் தில்லியில் குளிர்சாதன கருவி இல்லாமல் இருக்க இயலாது. அப்பொழுது கண்டிப்பாய் 400 யூனிட்களுக்கு மேல் உபயோகம் இருக்கும். அதற்க்கு கட்டணம் இப்பொழுது இருப்பதை விட இரு மடங்காகும் .

இவரது கட்சியில் இருப்பவர்கள் எத்தகையவர்கள். பிரசாந்த் பூஷன் , வெளிப்படையாக தனி காஷ்மீர் கேட்பவர்களை ஆதரிப்பவர். இப்பொழுது நக்ஸல்களின் ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்துவிட்டனர். வெளிப்படையாக நக்சல்களை தனி கட்சியில் இணைய சொல்லி அழைக்கின்றனர் இவரதுக் கட்சித் தலைவர்கள். இந்தியாவின் பாதுகாப்பு காஷ்மீரின் நிலையைப் பொறுத்தே உள்ளது. இன்று தனிக் காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் இவர்கள் நாளை சீனாவின் ஊடுருவலையும் ஆதரிக்கக் கூடும்.

ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த இவர்களின் தமிழகக் கிளை உறுப்பினர்கள் மேல் தினம் ஒரு குற்றசாட்டு வந்த வண்ணம் உள்ளது. இதில் தலைமையின் நிலை என்ன எனத் தெரியவில்லை. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதத்தில்,உட்கட்சிப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில எம் எல் யே க்கள் ,தலைமை மீது குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னால் முதல்வர் மீது இவர்கள் ,பிரச்சாரத்தின் பொது பல லஞ்சப் புகார்களை சொன்னார்கள். அதை வைத்து ஆட்சியையும் பிடித்தனர். ஆனால் இப்பொழுது ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்று நம்மைக் கேட்கின்றனர். கட்சி ஆரம்பித்து எதை கற்றாரோ இல்லையோ அரசியல் செய்வதில் நன்குத் தேறியுள்ளார் கேஜ்ரிவால்.

இன்று போலிஸ் அதிகாரியை விமர்சித்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளார் கேஜ்ரிவால்.. முதல்வராய் இருப்பவர் இப்படி பொதுவில் ஒரு அரசு அதிகாரியை எச்சரிப்பது சரியல்ல. அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது.

சரித்திரத்தில் படித்த துக்ளக் ஆட்சி இன்று நம் கண் முன்னே நடக்கிறது. இந்த நாட்டை இப்படிப்பட்டவர்களிடம் இருந்து அந்த ராமன்தான் காப்பாற்ற வேண்டும்

சர்வீஸ் சென்டர், கால் சென்டர் மற்றும் வைகுண்ட ஏகாதசி ….

ஜனவரி 12, 2014

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கால் சென்டரில் வேலைப் பார்த்த அனுபவம் இருப்பதால், எதோ ஒரு கால் சென்டரை அழைத்து லைனில் வெகு நேரம் காத்திருந்தாலும் நான்  பொதுவாய் கோபப் படுவதில்லை . நேற்று ஒரு விவரம் வேண்டி பியுரிட் நிறுவனத்தின் கால் சென்டரை அழைக்க நேர்ந்தது .

images

எதிர் பக்கம் லைனை அட்டென்ட் செய்தது ஒரு இளம் பெண் . அநேகமாய் புதிதாய் வேலைக்கு சேர்ந்தப் பெண்ணாக இருக்க வேண்டும்.

நான் : என் பேர் கார்த்திக்.  தி நகரில் இருந்து பேசறேன். இங்க தி நகரில் இருக்கும் உங்க டீலர் அட்ரஸ் கொடுங்க

கா.பெ : தரேன் சார். உங்க பேரு சொல்லுங்க (????)

நான் : கார்த்திக்

கா.பெ : நீங்க எங்க இருந்து பேசறீங்க

நான் : சென்னை தி நகர்ல இருந்து பேசறேன்

கா.பெ : உங்க நம்பர் சொல்லுங்க

நான் : XXXXXXXXXX

கா .பெ : உங்களுக்கு எப்படி உதவலாம் (???? இங்கதான் எனக்கு லைட்டா கோபம் வர ஆரம்பிச்சது )

நான் : தி நகர்ல இருக்க டீலர் அட்ரஸ் சொல்லுங்க

கா.பெ : கொஞ்சம் லைன்ல வெய்ட் பண்ணுங்க. தி நகர் சர்வீஸ் சென்டர் நம்பர் தரேன் . ( இன்னும் வாங்கவே இல்லை அதுக்குள்ளே சர்வீஸா ?)

நான் : சர்வீஸ் சென்டர் இல்லைங்க. டீலர் அட்ரஸ்

கா.பெ : சாலிகிராமத்துல ….

நான் : நான் தி நகர் டீலர் அட்ரஸ் கேட்டேன்

கா.பெ : இல்லை சார்.. சாலி கிராமத்தில்….

லைனை கட் பண்ணிட்டேன்..

ஒண்ணா ஒழுங்கா கொடுத்திருக்கற ஸ்க்ரிப்ட்டை உபயோகப்படுத்தனும். இல்லைனா கஸ்டமர் என்ன கேட்கறாங்கன்னு ஒழுங்கா கவனிச்சு பதில் சொல்லனும். ரெண்டுமே இல்லாட்டி கால் சென்டர் வேலைக்கு சரிபடாது.

இந்த உரையாடல் தி நகரில் மிக்சி ரிப்பேர் செய்யக் கொடுத்துட்டு காத்திருந்த நேரத்தில் நடந்தது.அந்த சர்வீஸ் சென்டர் அதுக்கு மேல. உள்ளே நுழைந்தவுடன் டோக்கன் வாங்கனுமாம். அதை எங்கயும் சொல்லலை . குறைந்தபட்சம் அங்க ஒட்டியிருக்கற விளம்பரத்துக்கு பக்கத்தில் ஒரு பிரிண்ட் அவுட்டில் போட்டிருக்கலாம். கவுன்டர்ல போய் கேட்டாதான் டோக்கன் வாங்கனும்னு சொல்றாங்க. அதுக்கப்புறமும் உங்க டோக்கன் எப்ப வரும்னு நீங்களா கவுன்டர் பக்கத்தில் பொய் விசாரிக்கணும் . இல்லாட்டி உக்காந்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

index

நான் இதே சர்வீஸ் துறையில் இருப்பவன் .  நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அதில் எங்கள் கிளையன்ட் எதிர்பார்க்கும் வசதிகள் என்ன, எந்த மாதிரி வாடிக்கையாளருக்கு மேலும் வசதிகள் செய்துத் தரலாம் என புதிது புதிதாய் என்று யோசிக்கிறோம். ஆனால் ஒரு இந்தியக் கம்பெனியில் இப்படி வாடிக்கையாளருக்கு வசதி இல்லாமல் ஒரு சர்வீஸ் சென்டர் வைப்பது பிரயோஜனம் இல்லை.

நீங்கள் எவ்வளவு நன்றாக ஒரு பொருளை சர்வீஸ் செய்தாலும், சர்வீஸ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளருக்கு எத்தகைய வசதிகள் செய்துத் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் உங்கள் சர்வீஸை மதிப்பீடு செய்வார்கள். அதை இந்தியக் கம்பெனிகள் உணர வேண்டும்.

மதியம் பெருமாள் கோவிலில் ஆரம்பித்த நகர்வலம் ஒருவழியா நாலு மணிக்கு முடிஞ்சது. பெருமாள் கோவிலில் நல்ல நிம்மதியான தரிசனம். ஆனாலும் ஒரு ஏமாற்றம். கோவிலில் நுழையும் பொழுதே சர்க்கரைப் பொங்கல் வாசம் மூக்கைத் துளைத்தது . சரி பிரசாதம் வாங்கறப்ப ரெண்டு தொன்னை வாங்கலாம்னு போனா அங்க இருந்தது அரிசி உப்மா…

பெருமாளே!!!!!!

 -அன்புடன் எல்கே

நியூசிலாந்துத் தொடர்

ஜனவரி 9, 2014

நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் ஒருதின மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. அணியின் முழு விவரத்தை இங்கேப் படிக்கலாம். அணியில் புதிதாய் சேர்க்கப்பட்டுள்ள இருவரைப் பற்றி மட்டும் இப்பதிவில்  பார்க்கலாம்.

ஸ்டுவர்ட் பின்னி

ஸ்டுவர்ட் பின்னி

ஸ்டுவர்ட் பின்னி

இவரைப் பற்றி ஏற்கனவே ஐபிஎல் ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய தேர்வுக் கமிட்டி உறுப்பினருமான  ரோஜர் பின்னியின் மகன். ரஞ்சிப்போட்டியில் கர்நாடக அணிக்காக ஆடும் இவர் ஆல்ரவுண்டர் ஆவார். கபில் தேவிர்க்குப் பிறகு இன்று வரை காலியாக உள்ள ஆல் ரவுண்டர் இடத்திற்கு புதிதாய் இவரை சோதனை செய்யப் போகின்றனர். உள்நாட்டுப் போட்டிகளில் நன்றாகவே விளையாடி வந்துள்ளார். கீழே இருப்பது http://www.espncricinfo.com தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விவரம். பேட்டிங்கில் அவ்வளவு அதிகமாக ரன்கள் அடிக்காவிட்டாலும், அடிக்கக் கூடியத் திறன் கொண்டவர் என்பது கடந்த ஐபிஎல் தொடரில் பார்த்தோம். பந்து வீச்சில் ஓவருக்கு ஐந்து ரன்களே சராசரியாகக் கொடுத்துள்ளார். இந்திய ஆடுகளங்களில் இது ஒரு சாதனை . இப்படிப் பட்ட நிலையில் அவர் தந்தை தேர்வுக் குழுவில் இருப்பதாலேயே அவர் தேர்வாகியுள்ளார் என சொல்வது நியாயமற்ற செயல். அவர் தந்தை தேர்வுக் குழுவில் இருப்பதால் இவர் கிரிக்கெட் ஆடக்கூடாத என்ன. இவருக்கு இந்த ஒருத் தொடருடன் நிறுத்திக் கொள்ளாமல் நான்கைந்து தொடருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அடுத்த உலகக் கோப்பை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய /நியூசி ஆடுகளங்களில் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்

Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
First-class 54 83 4 2802 189 35.46 4035 69.44 7 12 22 0
List A 48 39 9 669 74 22.30 703 95.16 0 3 16 0
Twenty20 59 47 14 765 49 23.18 568 134.68 0 0 62 29 15 0

Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
First-class 54 5089 2569 79 5/49 32.51 3.02 64.4 2 3 1
List A 48 1473 1356 37 4/29 4/29 36.64 5.52 39.8 3 0 0
Twenty20 59 49 672 811 35 4/14 4/14 23.17 7.24 19.2 1 0 0

ஈஸ்வர் பாண்டே

ஈஸ்வர் பாண்டே

ஈஸ்வர் பாண்டே

தனது பதினாறு வயது வரை கிரிக்கெட் பற்றியே நினைக்காத இவர் இன்று இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அதுவும் பெரிய அளவில் பேசப்படாத மத்தியப்பிரதேச அணிக்கு ஆடுபவர். கடந்த ஆண்டு ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரார். மிக அதிக வேகத்தில் வீசுவார் என எதிர்ப்பார்க்கவேண்டாம். வழக்கமான 135-140 கிமீ தான் இவரது பொதுவான வேகம். ஆனால் இவரது உயரம் இவருக்கு கிடைத்த ப்ளஸ் பாய்ன்ட் என சொல்ல வேண்டும். உயரத்தின் காரணமாய் இவரது குட் லென்த் பந்துக்களே அதிக பவுன்ஸ் ஆகும் வாய்ப்புள்ளது. இவர் தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்துவாரா இல்லை இஷாந்த் போன்று வீணடிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நல்லதொரு வேகப்பந்து வீச்சாளருக்கான தேடல் இன்றும் தொடர்ந்துக் கொண்டே உள்ளது.

Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
First-class 31 56 6653 3201 131 8/84 11/120 24.43 2.88 50.7 6 8 2
List A 16 16 838 661 22 4/44 4/44 30.04 4.73 38.0 2 0 0
Twenty20 6 6 114 160 5 2/26 2/26 32.00 8.42 22.8 0 0 0

இவர்கள் மட்டுமிலாது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் வருண் ஆரோனுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமானது.

இவர்கள் பந்துவீசுவதைப் பொறுத்தே இந்திய அணியின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் .

அன்புடன் எல்கே

மஹானின் கருணைக் கடாக்ஷம்

ஜனவரி 6, 2014
மஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது.

அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன்.

ஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.

பின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.

நுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது!’ என்றார் முதன்மை மருத்துவர்.

விஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், ‘சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்!’ என்றார்.

அதன்பின், சென்னை – அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர்.

அவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.

‘இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்!’ என்றார்.

இதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன்.

அவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரியனின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது.

’இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்!’ என்றார் அவர்.

பாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார்.

அங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபிநாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, ”நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்!’ என்றார்.

சுவாமிநாதனுக்கு மஹா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு.

அவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது.

பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது.

ஆரம்பத்திலேயே மஹா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்றுவருத்தப்பட்டார்.

எத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.

அப்போது, கர்நாடக – மகாராஷ்டிர எல்லையில் மஹாபெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

சுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.

அதன்பின், மஹா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

‘அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்!’ என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.

சற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா.

எதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, ‘அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது!’ என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

ஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி! இனம் தெரியாத புத்துணர்ச்சி!

ஜோஷியின் வார்த்தைகள் மஹா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.

அன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது. முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.

ஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன.

கேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.

அந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.

படத்தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது.

சுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார். ’

உடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்!’ என்றார்.

அவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று.

மறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார்.

அங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.

சுவாமிநாதன் நடுநடுங்கிப்போனார்.

மீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ஜோஷியும் மஹா பெரியவாளை மீண்டும் தரிசித்து, ‘சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிக்ஷை கேட்கிறேன், சுவாமி!’ என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

பக்தரின் அபாய நிலை தெரிந்தும், மஹா பெரியவா சும்மா இருப்பாரோ?

சிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்நானம் செய்யப் புறப்பட்டார். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.

நீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார்.

சுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார்.

‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!’ என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.

ஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது? எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்?

மறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன.

மஹா பெரியவாளே ‘அவனுக்குப் புனர்ஜன்மம்’ என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ? அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன.

எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது.

திருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தில் காணப்பட்ட கருநிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.

டெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன.

சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதெல்லாம் சளி வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது.

அதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.

சுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார்.

மூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.

அவர் மஹா பெரியவாளை தரிஸனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், ‘சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா? புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.

மஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?

நன்றி : மன்னார்குடி சீதாராமன் ஸ்ரீனிவாசன்

காட்சிகள்

ஜனவரி 1, 2014

நேற்று மனைவியும் மகளும் ஊரிலிருந்து வந்தனர். அவர்களை அழைத்து வர சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தனர். வழக்கமாய் கோவை எக்ஸ்ப்ரஸ் சரியான நேரத்துக்கு வந்ததாய் எந்த வித சாட்சியும் இல்லவே இல்லை. எனவே அதற்கு ஏற்றார் போல் சிறிது தாமதமாய்தான் கிளம்பினேன். அப்பவும் இன்னும் தாமதமாகத்தான் வந்தது கோவை. சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் திரும்பி வரும் வழியில் கண்ணில் பட்ட சிலக் காட்சிகள்

காட்சி  1

சென்ட்ரல் ஸ்டேஷன் பிரதான நுழைவாயிலில் இருக்கும் லக்கேஜ் ஸ்கேனர் எதற்கு வைத்திருக்கின்றனர் எனத் தெரியவில்லை. கடந்த வாரம் அவர்களை வழியனுப்ப வந்த பொழுது இடத்திற்குக் கேடாய் அணைத்து வைத்திருந்தினர். இப்பொழுது அதற்குக் காவலாய் துப்பாக்கிய ஏந்திய போலீசார் இருவர். வரும் யாரையும் கண்டுகொள்ளவுமில்லை. எதையும் சோதிக்கவுமில்லை. பின் எதற்கு அங்கு வெட்டியாய் அந்த இயந்திரம் எதற்கு ?

காட்சி  2

ரயில் வரக் காத்திருந்த நேரத்தில் பொழுது போகாமல் , அருகில் இருப்பவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். தன்பாத் செல்லும் வண்டிக்காகக் காத்திருகின்றனர் என அவர்கள் பேச்சில் இருந்துத் தெரிந்தது. அந்தக் குடும்பத்தில் பதினாறு அல்லது பதினேழு வயதுப் பெண்கள் இருவர். நவ நாகரீகத்தில் ஊறிய பெண்கள் என்பது அவர்கள் உடையிலேத் தெரிந்தது. முட்டிக்கு சிறிது கீழே வரும் முக்கால் பேண்ட். எதோ ஆங்கில வாசகம் எழுதிய டீஷர்ட். அதன் மேலே கோட் என்றும் சொல்ல முடியாது சர்ட் என்றும் சொல்ல முடியாது அப்படி ஒரு உடை. இருவரின் கையிலும் தடிமனான இரு புத்தகங்கள். அதில் ஒன்று சேட்டன் பகத் எனத் தெரிந்தது. மற்றொன்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் இருவரும் அந்தப் புத்தகத்தைப் படிப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தனர்.

காட்சி 3

சென்ட்ரலில் இருந்துக் கிளம்பும் பொழுது மணி  பதினொன்று . ஈவேரா சாலையில் இருந்து எக்மோர் செல்லும் பாலத்திற்கு திருமா யத்தனித்த அந்த கணத்தில் எங்கிருந்து வந்தனர் என்றுத் தெரியவில்லை. அதிபயங்கர வேகத்தில் லேட்டஸ்ட் பைக்களில் இளைஞர்கள். அவர்கள் வண்டி ஒட்டிய வேகமும் ,விதமும் மற்ற வண்டி ஓட்டிகளுக்கு பயத்தை உண்டு பண்ணியது. அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூடவா இவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. இப்படி அடுத்தவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி கொண்டாடுவதா புத்தாண்டு. அவர்கள் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும் என மனதிற்குள் வேண்டிக் கொண்டு மேலே விரைந்தால் கே கே நகர் வந்து சேர்வதற்குள் எப்படியும் ஒரு முப்பது பேராவது இப்படி அதிவேகத்தில் எதையும் கண்டுக் கொள்ளாமல் பறந்துக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் பல இடங்களில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இவர்களை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் .

 

இன்று அனுமத் ஜெயந்தி. அந்த அஞ்சனைப் புத்திரனின் அவதாரத் திருநாள். அனைவருக்கும் எல்லா நலமும் கிடைக்க அவனைப் பிரார்த்திப்போம். (பட உதவி : http://jaihanumanji.in)

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

 

அன்புடன் எல்கே

தென்னாப்ரிக்க டெஸ்ட் தொடர் – விமர்சனம்

திசெம்பர் 30, 2013

இன்று முடிந்த தென்னாப்ரிக்க  இந்திய டெஸ்ட் தொடரில் இந்திய அணியைப் பற்றிய விமர்சனம் . காலம்காலமாய் இந்திய அணியின் மீது வைக்கப்படும் ஒருக் குற்றச்சாட்டு வெளிநாட்டு ஆடுகளங்களில் சரியாக விளையாடுவதில்லை. அதுவும் இந்த முறை சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கூட்டி சென்றதால் எனக்கு இந்தத் தோல்வியில் பெரிதாய் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இல்லை என்றே சொல்லலாம்.  ஒவ்வொரு வீரராக எப்படி விளையாடினர் எனப் பார்ப்போம்

தவன்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் அதிரடி சதமடித்த தவனிடம் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய ஆட்டம், ரசிகர்களுக்கு மட்டுமன்றி விமர்சகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாய் இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க அதிரடி ஆட்டம் மட்டும் போதாது,பொறுமையும் நிதானமும் மிக அவசியம். இது இந்நேரம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அடுத்து தொடர்ந்து வெளிநாட்டுத் தொடர்கள்தான் இந்திய அணிக்கு. தனது ஆடும் விதத்தை சிறிது மாற்றிக் கொள்ளாவிட்டால் அணியில் இருந்து வெளியே செல்லவேண்டியதுதான் .

விஜய்

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இவர் இத்தொடரில் பெரிதாக சோபிப்பார் என நான் எண்ணவில்லை. ஆனாலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவு சிறப்பாகவே ஆடினார் என்று சொல்வேன். தொடக்க ஆட்டக்காரரின் முக்கியப் பணி, புது பந்தில் அவுட் ஆகாமல் விளையாடுவது. அதை இவர் சரியாகவே செய்தார். ஆனால் தொடக்கங்களை ரன்களாக மாற்றும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும்

புஜாரா

அடுத்த இந்தியச் சுவர் என்று சொல்லலாமா என்றால் அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகவேண்டும். ஆனால் ரன் குவிப்பதில் இவருக்கு இருக்கும் ஆர்வம் பாராட்டப்படவேண்டியது. இத்தொடரில் சிறப்பாக ஆடிய ஒரு சில இந்திய வீரர்களில் ஐவரும் ஒருவர்.

கோஹ்லி

வீரர்கள் ஆடும் வரிசையில் சச்சினின் இடத்தில் ஆடும் இவர், இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கையாள வேண்டும். உதாரணம் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்க்ஸ். லெக் சைட் சென்றப் பந்தை தொடாமல் விட்டிருக்கலாம்.இந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் இவர்தான். அதனால்  இவருக்கு இன்னும் அதிக சவால்கள் காத்திருக்கின்றன.அந்த சவால்களை இவர் கடந்து வருவார் என்றே நம்புகின்றேன்.

ரோஹித் ஷர்மா

இந்திய அணியில் மிக மோசமாக ஆடிய வீரர் இவர் என்று சொன்னால் மிகையாகாது. டெக்னிக்கலாக இவர் சிறந்த வீரர்தான். ஆனால் அதற்கேற்ற விதத்தில் ஆடுவதில்லை. இனியும் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என இவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரஹானே

அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தவர் இவர்தான். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே திறப்பாக ஆடினாலும் அதிகமாய் ரன் குவிக்க முடியவில்லை. இவர் அதிகம் பந்துவீச்சாளர்களுடன்தான் பேட்டிங் செய்தார். இவரை ரோஹித் ஷர்மா ஆடும் இடத்திற்கு மாற்றினால் இன்னும் சிறப்பாக ஆடுவார் என எண்ணுகிறேன்.

 தோனி

தனிப்பட முறையில் எனக்கு ஏமாற்றம் அளித்தது இவரது வழிநடத்தும் தன்மை. இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக செயல்பட்டிருக்கலாம். குறிப்பாய் டர்பன் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் புது பந்து எடுக்காதது ,சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பனில் அஸ்வினை அணியில் இருந்து நீக்கியது போன்றவை தவறான முடிவுகள்.

அஸ்வின்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமில்லா முதல் டெஸ்ட் பிட்ச்சில் கடைசி நாளன்று பெரு முனையில் அதிக ரன்கள் போகாமால் கட்டுப்படுத்தினார். இருந்தாலும் தனது பந்து வீசும் வேகத்தில் சிறிது மாற்றம் கொண்டுவந்தால் வெளிநாட்டு மைதானங்களில் இவர் ஜொலிக்க வாய்ப்புள்ளது. இதுதான் அவர் வெளிநாட்டில் ஆடும் இரண்டாவது டெஸ்ட் தொடர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பந்து வீச்சாளர்கள்

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றிப் பெற இயலும். எந்த ஒரு பந்து வீச்சாளரும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடவில்லை. ஜகீரை மட்டுமே நம்பி பிரயோஜனமில்லை. வேறு சிறந்தப் பந்துவீச்சாளர்களை ரஞ்சிப் போட்டியில் தேட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் நாம்

 

அன்புடன் எல்கே