Posts Tagged ‘கவிதை’

காதல் பயணம்

பிப்ரவரி 14, 2014

images
தென்றல் மெதுவாய் வருடிச்
சென்றுக் கொண்டிருக்க – நீரலைகள்
படகில் மோத – மோன நிலையில்
இருந்தேன் நான்….

என்னெதிரே அவள் அமர்ந்திருக்க
மாசற்ற அவள் முகத்தில் – கண்கள்
எனை நோக்கிப் பார்த்திருக்க – அவை
பேசியக் கதைகள் பல…

என் விரல்கள் அவள் கைகளை
அளக்க – அவள் முகம் அந்தி நேர
சூரியானாய் சிவந்தது….

எனை நோக்கியக் கண்கள்
மெல்லத் தாழ – என் அதரங்களோ
வேறு கதை சொல்லத் துடித்தன ….

நீரலைகள் படகை
உந்திச் செல்ல – காதல்
பயணம் தொடர்ந்தது…..

– அன்புடன் எல்கே

Advertisements

நிசப்தம்

மே 20, 2013

மீண்டும்  மனிதர்களின்
சப்தம் பொருட்கள்
இறக்குவதும் நகர்த்தவதுமாய்..

 

சில மணி நேரங்களில்
முடிந்துவிடும் மீண்டும்
நிசப்தம்தான் வீடு
காலியாகும் வரை…

தனி உலகம்

ஓகஸ்ட் 22, 2012

அது அவர்களின்
தனி உலகம்…

பல்லிகளும் அவர்களிடம்
உரையாடும் …

உயிரற்ற பொம்மைகளும்
உயிர் தோழிகளாவார்கள்…

சுவர்களும்
திரை சீலைகளாகும்- சிறு
கம்பியும் தூரிகையாகும்…

அது அவர்களின்
தனி  உலகம்…

 

-அன்புடன் எல்கே

உனக்கான பொருளாய்….

ஓகஸ்ட் 18, 2012
உனக்கான பொருளாய்
பாதுகாக்கிறாய் எனை ..

 

கோபம் கொள்ளும்
சமயம்  உனை மேலும்
சீண்டவே நினைக்கிறது
மனம்….

 

பெண்ணே
என்றும் நான்
உன்னுடையவன்தான் – சந்தேகம்
தவிர் – அன்பை பொழி…..

 

-அன்புடன் எல்கே

அயலான் வீட்டு மல்லிகை…

ஓகஸ்ட் 13, 2012


காலையில் எழுவதில்
இருந்து இரவில்
படுக்க செல்லும் வரை
ஒவ்வொரு வினாடியும்
உன்னை
சிந்திப்பதிலே கழிகிறது …

ஒவ்வொரு அணுவும்
உன்னை
பற்றிய சிந்தனையில்…

ஐயம் இல்லை நீ
எனக்கானவள் என்பதில் …
இருந்தும் நீ
அயலான் வீட்டு மல்லிகை …

-அன்புடன் எல்கே

கட்டுப்பாடு

ஓகஸ்ட் 10, 2012

 

மழைச்சாரலே!

பூமி மீது
ஏனிந்த கோபம் ?

வந்தால் வெள்ள
பிரவாகம் – இல்லையேல்
வறட்சி – மீண்டும்
மீண்டும் ஏனிந்தக்
கண்ணாமூச்சி ஆட்டம்??

உன் வருகையில்
இன்பமுண்டு – அளவு
மீறினால் அமிர்தமும்
விஷமாம் ௦- கட்டுப்பாடு
உனக்கும் வேண்டும்…
-அன்புடன் எல்கே

புதிரானவள்…!

ஓகஸ்ட் 8, 2012

சில நேரங்கள்
நீ பேசுபவை புரிந்தும்
புரியாமல்….

பல நேரங்களில்
உன் செயல்கள்…

தூக்கத்தில் நீ
பேசும் வார்த்தைகள்
காதல் கீதம் – அவற்றையும்
மறு(றை)ப்பாய் சில
சமயம்…

உன் வார்த்தைகள்
புரியாவிடினும் உன்
காதல் மட்டும்
புரிந்ததடி ….

-அன்புடன் எல்கே

முத்தம் …..

ஜூலை 27, 2012

செவ்வாய் அன்று காகித ஓடம் பத்மா எழுதிய கவிதையை தொடர்ந்து நான் எழுதிய சில..


நீ தரும்
முத்தம் கோடையையும்
மார்கழியாக்கும் …

——————
கொடுத்தாலும் பெற்றாலும்
மகிழ்ச்சி முத்தத்தில்
மட்டுமே….

நீ தந்த முத்தம்
ஊர் சென்ற பின்னும்
இனிக்கிறது…

——————
அன்புடன் எல்கே

காதல் வரம்

ஜூலை 23, 2012


கரையில் மோதும்
அலைகளாய் உன்
காதல் ..

மணலில் நின்று
வேடிக்கைப் பார்க்க எண்ணியவன்
நனைந்து போனேன்..

என் தோட்டத்து
செடிகளுக்கு உன் நினைவு
நீர் ஊற்றினேன் – பூவெல்லாம்
உன் வாசம் …

முழுதாய் எனை
ஆட்கொண்டாய் – காதல்
வரம் தருவது எப்போதோ ???

அன்புடன் எல்கே

குடையின்றி ….

ஜூலை 16, 2012
மெல்லிய சாரல்
பன்னீர்
தெளிக்க – தென்றல்
எனை வருடிச்
செல்ல பின்னோக்கி
சென்றன நினைவுகள்…

 

அவள்
கரம் இணைத்து – மழைச்
சாரலில் சுற்றிய
நாட்கள் – கடற்கரை மண்
காலில் இடற நடைப்
பயின்ற நாட்கள் அவை….

 

சாரல் ஒருபுறம்
கடல் அலை மறுபுறம்
என உடல் நனைய
தலை நனையாமல் – அவள்
சேலைத் தலைப்பே
குடையானது …

 

குடையின்றி நடக்கத்
துவங்கினேன் ….

 

-அன்புடன் எல்கே